தமிழ்நாடு

குளிர்சாதன பயன்பாடும்...பாதுகாப்பும்...

2nd Oct 2023 11:58 AM

ADVERTISEMENT

 சென்னை அம்பத்தூரில் வீட்டின் படுக்கை அறையிலிருந்த குளிர்சாதன இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில், தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. குளிர்சாதன இயந்திரம், செயற்கை மின் இயந்திரம் (இன்வெர்ட்டர்),
 தண்ணீரில் மூழ்க வைத்து வெந்நீர் தயாரிக்க உதவும் கம்பிகள் சாதனம் ("இம்மர்ஷன் ராட்') ஆகியவற்றை முறையாகப் பராமரிக்காத நிலையில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, குளிர்சாதன இயந்திரத்தை பராமரிக்கும் முறைகள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
 பாதுகாப்பு முறைகள்
 * 4 மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு (சர்வீஸ்) கட்டாயம்.
 * மின்மாற்றி (ஸ்டெபிலைசர்) பயன்பாடு அவசியம்.
 * மின் இடர்ப்பாடு இருக்கும்போது இயக்கக் கூடாது.
 * மின் பகிர்மானப் பெட்டியில் பரிந்துரைக்கப்பட்ட கன அளவு வயர் இருத்தல் வேண்டும்.
 * குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைக்கக் கூடாது.
 * மின்தடை ஏற்பட்டால் ஏசி பிரேக் ஸ்விட்சை அணைக்க வேண்டும்.
 * மீண்டும் மின் இணைப்பு வந்தவுடன் உடனடியாக ஏசி-யை இயக்கக் கூடாது.
 * ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏசியை மாற்ற வேண்டும்.
 * பழைய ஏசி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 * தொடர்ச்சியாக இயக்கப்படுவதை தவிர்த்தல் அவசியம்.
 * ஏசி சுத்திகரிப்பான்களை (ஃபில்டர்) வாரந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும்.
 * பராமரிப்புக் கட்டணச் செலவு குறித்து கவலைப்பட்டு சுயமாக பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது.
 மின் சிக்கன முறைகள்
 * குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரித்தல்.
 * மின்மாற்றியை ஆண்டுக்கு ஒருமுறை பராமரித்தல்.
 * மின் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
 * ஏசி இயந்திரத்தை உடனுக்குடன் "ஆஃப்" மற்றும் "ஆன்" செய்யாமல் இருத்தல்
 * இன்வெர்ட்டர் ரக ஏசி-க்களை பயன்படுத்துதல்.
 ஏசி பயன்பாட்டின் நன்மைகள்
 * சரியாக பராமரிக்கப்படும் ஏசி மூலம் காற்றின் தூய்மை உறுதிப்படுத்தப்படும்.
 * காற்றில் ஈரப்பதம் நீடித்திருக்கும்.
 * உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்கும்.
 * ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்.
 * பூச்சிகள் மற்றும் கொசுக்களைத் தடுக்கும்.
 * எலெக்ட்ரானிக் பொருள்கள் வெப்பமாவதைத் தடுக்கும்.
 அதீத பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
 * உடல் வெப்பநிலை குறைந்து ரத்த பாதிப்பு ஏற்படலாம்
 * அகச்சுரப்பிகளில் (தைராய்டு, சர்க்கரை) பாதிப்பு ஏற்படலாம்
 தோல் வறட்சி
 * பராமரிக்கப்படாத ஏசி மூலம் சுவாசப் பிரச்னைகள் வரலாம்; ஞி உடல் சோர்வு, ஞிஅசதி; ஞி சுறுசுறுப்பின்மை.
 உலர்விழி பாதிப்பு...
 நாளொன்றுக்கு 18 மணி நேரம் ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக உலர்விழி பாதிப்பு ஏற்படும். கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருப்பதே உலர் விழி பிரச்னை எனப்படுகிறது.
 அதைத் தவிர்க்க, ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். 24 டிகிரிக்கு குறைவாக ஏசி சாதனத்தை இயக்கக் கூடாது. குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT