காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3122 கனஅடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.94 அடியிலிருந்து 36.31 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3446கன அடியிலிருந்து வினாடிக்கு 3122 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.26 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின்நீர்மட்டம் சரியா தொடங்கியுள்ளது