தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,848-க்கு விற்பனை!

2nd Oct 2023 10:44 AM

ADVERTISEMENT

 


சென்னையில் தங்கம் விலை ரூ.42,848 விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 நாள்களாக பெரியளவில் மாற்றமின்றி  சவரனுக்கு ரூ.32 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  அக்டோபர் 2-(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848-க்கும், ஒரு கிராம் ரூ.5,356-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.42,880-க்கும், ஒரு கிராம் ரூ.5,360-க்கும் விற்பனையானது.

படிக்க:பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.75.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT