தமிழ்நாடு

காந்தி பிறந்தநாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

2nd Oct 2023 10:55 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள காந்தியின் முழு உருவச் சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்க | பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

ADVERTISEMENT

இதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில் சென்னையில் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் காந்தியின் முழு உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT