தமிழ்நாடு

ஆசிய விளையாட்டுப்போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து 

2nd Oct 2023 02:16 PM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-இல் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு என் பாராட்டுகள்.
மேலும் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு திறமையாளரான
ராம்குமார் ராமநாதனுக்கும் என் வாழ்த்துகள்.
ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ள நமது தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT