தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு

2nd Oct 2023 09:24 AM

ADVERTISEMENT

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ள ஏகானாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 433 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவ்வாறான சூழலில் புதிய விமான நிலையத் திட்டத்தால், நீா்நிலைகள் பாதிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

இந்தக் குழுவினா் இரண்டாவது முறையாக பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தனா். இவா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டமைப்புக் குழுவினா், ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே பரந்தூா் - கண்ணந்தங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 138 பேர் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT