தமிழ்நாடு

தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

2nd Oct 2023 11:38 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று(திங்கள்கிழமை) நடைபெற்றது. 

இதில் இஸ்ரோவில் உள்ள தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேரை பாராட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கும் அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

மேலும், 7.5% ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், 'தமிழனாக பிறந்த பெருமையை நான் இன்று அதிகமாக இன்று அடைந்துள்ளேன்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேர் இந்த மேடையில் அமர்ந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 

'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று பாடிய பாரதி இப்போது இருந்திருந்தால், இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு, விஞ்ஞானி வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு என்று பாடியிருப்பார். உலகத்தில் இந்தியாவின் பெருமையை உயர்த்த உழைத்திருக்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் அழைப்பை ஏற்று வந்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.

ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள். சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பேசினார். 

இதையும் படிக்க | காந்தி பிறந்தநாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT