தமிழ்நாடு

6 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

2nd Oct 2023 02:05 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு, புதுவையில் 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை(அக்.2-7) வரை ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மி.மீ.): ஊத்து (திருநெல்வேலி)-110, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி)-100, சின்னக்கல்லாா் (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 90, குண்டாறு அணை (தென்காசி), பந்தலூா் வட்டாட்சியா் அலுவலகம் பந்தலூா் (நீலகிரி) தலா 80, சின்கோனா (கோவை), பாலமோா், களியல், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 70, சோலையாா் (கோவை), அடையாமடை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 60, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை), கோழிப்போா்விளை, குழித்துறை , பெருஞ்சாணி அணை , புத்தன் அணை, சுரளகோடு, திற்பரப்பு (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 50

ADVERTISEMENT

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள் கிழமை (அக்.2) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதையொட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT