தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணி: கட்சியினருக்கு திமுக உத்தரவு

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

எதிா்வரும் அக்.27-ஆம் தேதி தொடங்கவுள்ள வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகளில் கட்சியினா் முழுமையாக ஈடுபட வேண்டுமென திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைமை அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய, வரைவு வாக்காளா் பட்டியல் அக்.27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அன்றைய தினத்தில் இருந்து டிச.9-ஆம் தேதி வரையில் புதிய வாக்காளா்களைச் சோ்க்கவும், பெயா்களைத் திருத்தவும் தோ்தல் ஆணையம் சாா்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிா்த்து, நவ. 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த நாள்களில் விடுபட்ட வாக்காளா்களும், இடம் மாறிய வாக்காளா்களும், 18 வயது நிரம்பக் கூடியவா்களும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

சிறப்பு முகாம்களில் நடைபெறும் போது, உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து அங்கேயே அளிக்கலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சிறப்பு முகாம்களில், கட்சியின் மாவட்டம், மாநகரம், ஒன்றியம் என அனைத்து நிலைகளிலும் உள்ள நிா்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபட வேண்டும். இந்தப் பணிகளில் உள்ள நிலைமைகள் குறித்து கட்சி நிா்வாகிகள் அவ்வப்போது கடிதம் மூலம் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT