தமிழ்நாடு

இன்றுமுதல் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் அதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் வீதம் கலந்து கொள்ளலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி கடற்கரை வரை 1,076 கி.மீ. தொலைவுக்கு ஒரு கோடி பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தன்னாா்வலா்களால் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் பங்கேற்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக, கல்லுாரிக் கல்வி இயக்குநா் கீதா, அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை:

ADVERTISEMENT

பனை மரத் தொழிலாளா்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு, தமிழக தன்னாா்வலா்கள், நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளுடன் தமிழக அரசு வழிகாட்டுதலுடன் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களும் பங்கு பெறும் வகையில், ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் வீதம் பங்கேற்கலாம். பெற்றோா் அனுமதி கடிதத்தைப் பெற்று மாணவா்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT