தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து

1st Oct 2023 08:11 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்புப் பணிக்காக, திங்கள்கிழமை(அக்.2) புறநகர் ரயில் சேவைகளிள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை(அக்.2) விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

இதையும் படிக்க | தமிழகத்தில் செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,481 கோடி!

காஞ்சிபுரம்-கடற்கரை, கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் நாளை திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT