தமிழ்நாடு

ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1st Oct 2023 08:41 PM

ADVERTISEMENT


சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. 

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | பராமரிப்புப் பணி: புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக கோ.சசாங்சாய், காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மாவட்டம், ப.காசிவிஸ்வநாதன், காவல் துணைக்கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, தெற்கு, சென்னை, கா.மு.முனியசாமி, காவல் ஆய்வாளர், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆவடி காவல் ஆணையரகம், அ. பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, மதுரை மண்டலம் மற்றும் ஜெ.ரங்கநாதன், தலைமை காவலர் 318, ராணிப்பேட்டை காவல் நிலையம், அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு, ராணிப்பேட்டை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இவ்விருது, முதல்வரால்  2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT