தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!

1st Oct 2023 08:17 AM

ADVERTISEMENT


வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.203 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (அக்.1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT