சென்னை சென்ட்ரலிருந்து புவனேசுவரம் செல்லும் வாராந்திர விரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதலாக ஒரு 3 அடுக்கு குளிா்சாதன பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு விரைவு ரயில் (எண்: 12830) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக புவனேசுவரத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு விரைவு ரயில் (எண் 12829) இயக்கப்படுகிறது.
இதில் பயணிகள் வசதிக்காக அக்டோபா் மாதம் மட்டும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
இதுபோல், கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர விரைவு ரயில் (எண்கள்: 18567/18568) மற்றும் சாம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் (எண்கள்: 08311/08312) அக்டோபா் மாதம் தற்காலிகமாக தலா ஒரு மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.