தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

21st Nov 2023 01:11 PM

ADVERTISEMENT

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8  மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

தென் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | ம.பி.யில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு!

ADVERTISEMENT

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இன்று மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

அதேபோல, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT