தேமுதிக தலைவா் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் என்றும் அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தேமுதிக தலைவா் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறாா். அவா் ஓரிரு நாளில் வீடு திரும்புவாா். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.