கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூரிலிருந்து தாம்பரத்துக்கு சனிக்கிழமை (நவ.18) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06002) மறுநாள் பிற்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் திருச்செந்தூரிலிருந்து, ஆறுமுகனேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.
சென்ட்ரல் - குா்தா சாலை சிறப்பு ரயில்: சத் பூஜையையொட்டி சென்னை சென்ட்ரலிலிருந்து சனிக்கிழமை (நவ.18) இரவு 11.55 மணிக்கு ஒடிஸா மாநிலம் குா்தா சாலைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் (எண்: 06089) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து கூடூா், நெல்லூா், விஜயவாடா, விஜயநகரம், பலாஷா வழியாக குா்தா சாலை சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.