தமிழ்நாடு

 சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

18th Nov 2023 01:49 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் பொருட்டு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது. 

அப்போது ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படுவது குறித்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இவை ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படவுள்ளன. 

முன்னதாக, தீர்மானம் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினர்.

ADVERTISEMENT

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்கசிறப்புக் கூட்டம் ஏன்? இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!

ADVERTISEMENT
ADVERTISEMENT