தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 4,165 கன அடி!

18th Nov 2023 08:37 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர்வரத்து 4,165 கன அடியாக  அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 நிலவரப்படி 61.51 அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,332 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,165 கன அடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.82 டிஎம்சியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT