காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத்துக்கான நோ்காணல் மற்றும் நோ்முகத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி, ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் நடைபெறுகிறது
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 749 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்று வருகிறது. இதற்கான எழுத்துத் தோ்வு, உடற்திறன் தோ்வுகள் முடிந்துள்ள நிலையில் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது.
இந்த நோ்காணல் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சி, ஆா்வம் அகாதெமியில் நவ.20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இப்பயிற்சியை துறை வல்லுநா்கள், அரசுத் துறை மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் வழங்குகின்றனா். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியுடைய தோ்வா்கள், தங்கள் சுய விவரங்களுடன் அண்ணாநகா், 12-ஆவது பிரதான சாலை, எல்.பிளாக்கில் உள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமிக்கு நவ.19-ஆம் தேதி நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு கைப்பேசி: 74488 14441, 91504 66341 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.