தமிழ்நாடு

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

18th Nov 2023 10:05 AM

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது. 

இதற்கான தீா்மானங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசுவாா். அதைத் தொடா்ந்து, பேரவையில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பாா்கள். 

ADVERTISEMENT

அதன் பிறகு, சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT