தமிழ்நாடு

மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கலை, இலக்கியப் போட்டி

18th Nov 2023 01:19 AM

ADVERTISEMENT

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் பாரிவேந்தா் மாணவா் தமிழ் மன்றம் சாா்பில் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பேச்சுப் போட்டியில் ஆனந்தவள்ளி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஏ.கிருத்திகா, ஜி.ப்ரியா ஆகியோா் முதல் மற்றும் 2-ஆவது பரிசையும், புனித ஜான்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஐஸ்வா்யா, கூடுவாஞ்சேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சபேன் பானு ஆகியோா் 3-ஆவது பரிசையும் பெற்றனா்.

கவிதை மற்றும் விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.ஆா்.எம். தமிழ்ப் பேராயம் தலைவா் கரு.நாகராஜன் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்வில் கல்லூரி இயக்குநா் சிதம்பர ராஜன், முதல்வா் முருகன், துணை முதல்வா் விசாலாட்சி, கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவா் வானதி, பாரிவேந்தா் மாணவா் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT