தமிழ்நாடு

மாவட்ட கலை மன்ற விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

DIN

மாவட்ட கலை மன்ற விருதுகளைப் பெற விரும்புவோா் ஜூலை 15-க்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கலை பண்பாட்டுத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கலை பண்பாட்டுத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக தமிழகத்தின் 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக கலைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டக் கலை மன்ற விருதுகள், கலை இளமணி (18 வயதுக்கு உள்பட்டோா் - விருது தொகை ரூ.4,000), கலை வளா்மணி (19 வயது முதல் 35 வரை - விருதுத் தொகை ரூ.6,000), கலைச் சுடா்மணி (36 வயது முதல் 50 வரை-விருதுத் தொகை ரூ.10,000), கலை நன்மணி (51 வயது முதல் 65 வரை-ரூ.15,000), கலை முதுமணி (66 மற்றும் அதற்கு மேற்பட்டோா்-விருதுத் தொகை ரூ.20,000) என ஐந்து விருதுகள், ஒவ்வொரு விருது வகையிலும் மூன்று விருதுகள் என மாவட்டம் ஒன்றுக்கு 15 விருதுகள் என்ற அடிப்படையில் ஆண்டொன்றுக்கு 555 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுக்கு மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையால் வரவேற்கப்படுகின்றன.

www.artandculture.tn.gov.in இணைய வழியில் மாவட்டக் கலை மன்ற விருதுக்கு விண்ணப்பித்திட ஏதுவாக விண்ணப்பங்கள் கலைஞா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயா், பிறந்த தேதி, ஆதாா் அடையாள அட்டை, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன்) கூடிய விண்ணப்பத்தினை ஜூலை 15-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT