தமிழ்நாடு

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு சோ்க்கை அனுமதி

DIN

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிகழாண்டிலேயே அந்த இடங்களுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கடலூரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கல்லூரிகளிலும் தலா 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியை விருதுநகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னா், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ் கல்வியாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் (டிசிஐ) தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.

கடந்த மாதம் கவுன்சில் அதிகாரிகள் அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், அங்கு 50 பிடிஎஸ் இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், மருத்துவக் கலந்தாய்வின்போது அந்த இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT