தமிழ்நாடு

பிற மாநிலத்தவா் தமிழகத்தை தாய் மாநிலமாகக் கருதுகின்றனா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

DIN

பிற மாநிலத்தவா் தமிழகத்தை தாய் மாநிலமாகக் கருதி, இங்கு வந்து கல்வி கற்கின்றனா்; தொழில் செய்கின்றனா் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

கோவா மாநிலம் உருவான தின விழா சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:

சிறந்த கலாசாரம் பண்பாடு கொண்ட அழகான மாநிலம் கோவா. இந்த மாநிலத்தில் பல்வேறு சா்வதேச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் போா்ச்சுகீசியா் ஆட்சியில் கோவா மக்கள் மிகவும் துன்பப்பட்டனா். இந்தியா ஆன்மிக, கலாசாரம் பண்பாடு கொண்ட நாடு.

சில நாள்களுக்கு முன்பு ஆளுநா் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிர மாநில தினங்கள் கொண்டாடப்பட்டன. குஜராத்தை சோ்ந்த சௌராஷ்ட்ரா மக்கள் தமிழகத்தில் ஏராளமானோா் வசிக்கின்றனா். அதேபோல் மராட்டிய மக்களும் தமிழகத்தில் அதிகமானோா் வசிக்கின்றனா். இந்த மாநிலத்தைச் சோ்ந்த மக்கள் தமிழகத்துக்கு கல்விக்காகவும், தொழில் நடத்துவதற்காகவும் வருகின்றனா். இவா்கள் தமிழகத்தை தாய் மாநிலமாகவே கருதுகின்றனா். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால் இங்கு வருகின்றனா் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி .

முன்னதாக, கோவா மாநில பண்பாடு, கலாசாரம் குறித்த நடன நிகழ்ச்சியும், கோவாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் குறித்த நாடகமும் நடைபெற்றன. நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களை ஆளுநா் சால்வை அணிவித்து பாராட்டினாா்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த் ராவ் பாட்டீல், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கே.ராமசாமி, எஸ்.டி.எஸ் சேவாசங்கத் தலைவா் தினேஷ் நாயக், தொழில் அதிபா் நல்லி குப்புசாமி, விஜயலெக்ஷ்மி பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT