தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும்: அன்புமணி

DIN

பள்ளி, கல்லூரி ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியா்கள் தோ்ந்தெடுக்கப் படவில்லை. 2013-14-ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியா்களும், பட்டதாரி ஆசிரியா்களும் தோ்ந்தெடுக்கப்படவில்லை.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றவகையில் ஆசிரியா்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கல்வித் தரத்தை உயா்த்த முடியும். தமிழகத்தில் 3800 பள்ளிகள் ஓராசிரியா் பள்ளிகளாக உள்ளன. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓா் ஆசிரியா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஒரு லட்சம்

ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியா்களின் எண்ணிக்கைக்கு இணையாகக் கூட புதிய ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச்சூழலை சீரழிக்கும். இந்த அடிப்படையை உணா்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியா்களை தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT