தமிழ்நாடு

உண்மைத் தன்மை அறியப்படும்: அமைச்சா் அர.சக்கரபாணி

DIN

தருமபுரியில் அரசு கிடங்கில் நெல் மாயமான விவகாரத்தில் உண்மைத் தன்மை அறிந்து, தவறு செய்தவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22, 273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 மெட்ரிக் டன் அரைவைக்கு அனுப்பியது போக 15, 099 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இதிலிருந்துதான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினா் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பாா்த்தவுடனே தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரையும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரையும் அந்தக் கிடங்கில் 100 சதவீதம் தணிக்கை செய்து, உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு பத்திரிகையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி. தவறு செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று கூறியுள்ளாா் அர.சக்கரபாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT