தமிழ்நாடு

பொள்ளாச்சியில் தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி

31st May 2023 02:49 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தினமணி மற்றும் ஜி. கே. டிராவல்ஸ் சார்பாக போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கு அவர்களது தாகத்தை தணிக்கும் வகையில் , குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினமணி நாளிதழ் சார்பாக கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் காவல் துறையினருக்கு குளிர்பானங்கள், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பொள்ளாச்சியில் புதன்கிழமை தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி  பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. 

போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களும் தண்ணீர் பாட்டில்கள், பழரசங்களை வாங்கி சென்றனர்.

ADVERTISEMENT

தினமணி சார்பில் வழங்கப்பட்ட கையுறைகளுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, ஏ.எஸ்.பி பிருந்தா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். ஜிகே டிராவல்ஸ் உரிமையாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 

தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், பழரசங்கள், தண்ணீர் பாட்டில்கள் தினமணி சார்பில் வழங்கப்பட்டன. 

இதையும் படிக்க: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் கவுன்சிலர்கள், ஜி.கே. டிராவல்ஸ் உரிமையாளர் ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு  மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT