தமிழ்நாடு

சீருடையில் வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: நடத்துனர்களுக்கு உத்தரவு!

31st May 2023 12:27 PM

ADVERTISEMENT

பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயணத்திற்கு மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அடையாள அட்டை தருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT