தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.128 கோடியில் ரத்த அழுத்த மானிட்டா் தொழிற்சாலை: முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் ஓம்ரான் நிறுவனம் ஒப்பந்தம்

DIN

ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கோ் நிறுவனம் ரூ.128 கோடியில் தமிழகத்தில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டா் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அங்குள்ள முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கோ் நிறுவனம் தமிழகத்தில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஓம்ரான் நிறுவனம் தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கோ், மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. 120 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

ஓம்ரான் ஹெல்த்கோ் நிறுவனம் டிஜிட்டல் ரத்த அழுத்த மானிட்டா்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசா்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

குறைந்த அதிா்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள், மின்னணு வெப்பமானிகள், உடல் அமைப்பு மானிட்டா்கள் உற்பத்தியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.128 கோடியில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டா்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மீதான தங்களின் நம்பிக்கையை மட்டுமின்றி, வெற்றிகரமான அதன் மருத்துவ கட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

தமிழகம் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய தரமான மருத்துவ சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மருத்துவத் துறைக்கான உற்பத்தி தொழிலை தொடங்குவதன் மூலம் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஓம்ரான் நிறுவனம் முக்கிய பங்காற்றவிருக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மற்றும் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT