தமிழ்நாடு

கணவர் கொலை: மனைவி போலீஸில் சரண்

31st May 2023 11:20 AM

ADVERTISEMENT

ஈரோடு: கணவரை கொலை செய்த மனைவி போலீஸில் சரணடைந்தார்.

ஈரோடு கனிராவுத்தர் குளம் ஜாமியா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). தறிப்பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி பத்மா (52). இவர்களது மகன் சுரேஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகள்  தீபா இறந்துவிட்டார்.
சுப்பிரமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.

இதனையறிந்த மனைவி பத்மா, சுப்பிரமணியை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் அவர் கேட்காமல் அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். 

இதுகுறித்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை: போலீசார் விசாரணை

இந்நிலையில், புதன்கிழமை காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பத்மா, வீட்டிலிருந்த கட்டையால் சுப்ரமணியின் தலையில் அடித்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதையடுத்து, பத்மா வீட்டை பூட்டி விட்டு ஈரோடு, வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களைக் கூறி சரணடைந்தார். 

அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சுப்பிரமணி சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT