தமிழ்நாடு

செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மலர்க் கண்காட்சி!

31st May 2023 08:57 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக ஜூன் 3-ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கடந்தாண்டு செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டும் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 50-யும் நிர்ணயம் செய்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT