தமிழ்நாடு

தாகம் தணிப்போம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் குடிநீர், குளிர்பானங்கள்!

31st May 2023 04:45 PM

ADVERTISEMENT

 

தருமபுரி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், விநாயக மிஷன் அலைய்டு அன்ட் ஹெல்த் சயின்ஸ், ஸ்பார்டா குளிர்பான நிறுவனம், ஸ்ரீசரவணபவன் குரூப் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தாகம் தணிப்போம் என்கிற நிகழ்ச்சி வழியாக தருமபுரியில் போக்குவரத்துக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி நான்கு முனைச் சந்திப்புச் சாலையில் போக்குவரத்து காவல் உதவி மையம் முன், நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், ரகுநாதன் ஆகியோர் முன்னிலையில், போக்குவரத்துக் காவலர்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில், போக்குவரத்துக் காவலர்களுக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரகுநாதன், சரவணன் உள்ளிட்டோர்.

இதேபோல், தருமபுரி நகராட்சி பள்ளி வளாகத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், குளிர்பானம், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் புவனேஸ்வர் என்கிற அண்ணாமலை முன்னிலை வகித்தார். இதில், தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர், குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சந்திரகுமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தருமபுரி பதிப்பு விளம்பரப் பிரிவு துணை மேலாளர் பி.பிரதேஸ், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில், போக்குவரத்துக் காவலர்களுக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரகுநாதன், சரவணன் உள்ளிட்டோர்.

தருமபுரி நகராட்சி பள்ளி வளாகத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்குகிறார் நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது. உடன், நகராட்சி ஆணையர் புவனேஸ்வர் என்கிற அண்ணாமலை, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்டோர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT