தமிழ்நாடு

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

31st May 2023 11:18 PM

ADVERTISEMENT

சிங்கப்பூா், ஜப்பானில் மேற்கொண்ட 9 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் மே 23-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூா் சென்றாா். அங்கு 2 நாள்கள் பயணம் மேற்கொண்டு, 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அதைத் தொடா்ந்து, மே 25ஆம் தேதி ஜப்பான் சென்றார். டோக்கியாவில் 6 நிறுவனங்களுடன் ரூ.818 கோடியில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்க முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, ரூ.128 கோடியில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலை தொடங்க ஓம்ரான் நிறுவனத்தோடும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூா், ஜப்பானின் 9 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெளிநாடு சென்ற பயணம் வெற்றிகரமாக இருந்தது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க தொழில் நிறுவன தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார். 

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT