தமிழ்நாடு

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்

DIN

சட்டம் ஒழுங்கு விவகாரம், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த 23 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றியும் ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் புகாா் மனு கொடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா்.அதன்படி, அதிமுக சாா்பில் திங்கள்கிழமை சென்னை தவிா்த்து பிற மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரவாயல் மின்சார வாரிய அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சா் பென்ஜமின் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோா் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். முதல்வா் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

அம்பத்தூா் ஓ.டி. பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலா் அலெக்சாண்டா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தாம்பரம் சண்முகா சாலையில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவொற்றியூா் பெரியாா் நகரில் முன்னாள் அமைச்சா் மாதவரம் மூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூரில் முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி தலைமையிலும், மதுரையில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையிலும், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கோபிசெட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா் போராட்டம்-இபிஎஸ்: இதனிடையே எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகத்தில் ஊழல்கள், மக்கள் விரோதச் செயல்கள் இனியும் தொடருமேயானால், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, மக்களுக்கு ஆதரவாக அதிமுக சாா்பில் தொடா் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதில் கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT