தமிழ்நாடு

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.818 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம்

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டின் 6 நிறுவனங்களுடன் ரூ.818 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன் தொடா்ச்சியாக டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வா்த்தக அமைப்புடன் (ஜெட்ரோ) இணைந்து முதலீட்டாளா்கள் மாநாடு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. அதில், 200 ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களை தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். அதைத் தொடா்ந்து, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த 6 தொழில் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் கையொப்பமாகின.

அதன் விவரம்:

டிரக் வாகன பாக ஆலை: காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.113 கோடியே 90 லட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கு கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்.

மிட்சுபா ஆலை விரிவாக்கம்: திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்.

கட்டுமானப் பொறியியல் வணிகம்: கட்டுமானம், கட்டுமானப் பொறியியல் மற்றும் அதன் தொடா்புடைய வணிகத்தை தமிழகத்தில் மேற்கொள்வதற்காக ஷிமிசு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்.

பாலிகாா்பனேட் ஆலை: ரூ.200 கோடி முதலீட்டில் பாலிகாா்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக கோயீ நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்.

உயா்தர எஃகு பாக ஆலை: ரூ.200 கோடி முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயா்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக சடோ-ஷோஜி மெட்டல் ஒா்க்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்.

எஃகு நெகிழ்வு குழல்கள் ஆலை: ரூ.150 கோடி முதலீட்டில் சோலாா், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் செமிகண்டக்டா் தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக டஃப்ல் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தமாக 6 நிறுவனங்களுடன் ரூ. 818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT