தமிழ்நாடு

மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி!

DIN

திருப்பூர்: மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூரில் மதிமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து வந்தார். இதனை தலைமைக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமையாக நம்பி வந்தனர். 

ஆனால் தங்களது மகனான துரை வைகோவை அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் தங்களது நடவடிக்கையில் என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது. 

அவர் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. எனெனில் மதிமுகவுக்கு என்று தனியாக எதிர்காலம் இல்லை. ஆகவே, மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். 

அதே வேளையில், எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. ஆனால் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT