தமிழ்நாடு

வாழப்பாடியில் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதல்: பயணிகள் 10 பேர் படுகாயம்

30th May 2023 08:32 AM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியதில் பயணிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு  கோயம்புத்தூருக்கு வாழப்பாடி வழியாக தனியார் ஆம்னி பேருந்து சென்றது. அந்த பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த  நெப்போலியன் ரமேஷ்  ஒட்டிச் சென்றார். வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து சென்று  கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது. 

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் இடது புறம் முழுவதுமாக சேதம் அடைந்தது. பேருந்தில் தூங்கியவாறு  பயணம் செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: திருநள்ளாற்றில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் 

இந்த விபத்தில்  காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT