தமிழ்நாடு

கோவையில் ஆஸ்திரேலிய பேரவை உறுப்பினர்களுக்கு செண்டை மேளத்துடன் வரவேற்பு

DIN

கோவை: கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலிய அவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கேரளத்தின் பாரம்பரிய செண்டை மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா அவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை கேரள பாரம்பரிய செண்டை மேலத்துடன் வரவேற்றனர்.

மேற்கு ஆஸ்திரேலியா சட்டப்பேரவையின் அவைத்தலைவர் மைக்கில் ராபர்ட்ஸ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் டேவிட் ஹனி,டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.

இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தேயிலை விவசாயம் சார்ந்த நிகழ்வு மற்றும் பழங்குடியின கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை வந்த ஆஸ்திரேலிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கேரள மாநிலத்தின் பாரம்பரிய செண்டை மேளம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சியை கண்டு களித்த ஆஸ்திரேலியா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேரள பாரம்பரியத்தை இசைத்து மகிழ்ந்தனர்.

இதில் பெண் அவைத் தலைவர் செண்டை மேளம் வாசிக்க, சட்டப்பேரவை உறுப்பினர் டேவிட் ஹனி ஜால்ரா இசை கருவியை இசைத்தார். உற்சாகமாக வாசித்த அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை உடல் அசைவுகளால் வெளிப்படுத்தினர். இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகதீஷ், கலாசாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், இங்குள்ள கல்வித்தரம் அறியவும் தமிழகம் வந்துள்ளோம்.

கோவை மற்றும் கோத்தகிரியில் தனியார் கல்லூரிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும்  உள்ள  இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டின் கல்வித்தரம் உயர வேண்டும், கல்வித்தரத்தில் வேறுபாடும் மாறுபாடும் இருக்கக் கூடாது. தமிழகத்திற்கும் வெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை‌ மேம்படுத்த வேண்டும்.

நல்ல வேலை செய்பவர்களுக்கு எப்போதும் எங்கேயும் வேலை உண்டு. கலாசாரம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தில் மகிழ்வை அளிக்கிறது. 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கல்வி வேலைவாய்ப்பு சார்ந்த நிகழ்வுகள்நடைபெற உள்ளன. கல்வி மற்றும்  வேலை வாய்ப்பு சார்ந்த நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

அமைச்சர்கள் பி.டி.ஆர்., உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறோம் என்று அவர் பேசினார்.

தமிழகம் வந்த மேற்கு ஆஸ்திரேலியா சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தமிழக கலாச்சார வரவேற்பை அளிக்காமல் கேரள மாநிலத்தின் கலாச்சார வரவேற்பை அளித்தது  கேள்வியை எழுப்பி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT