தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம மழை பெய்யும்?

29th May 2023 06:13 PM

ADVERTISEMENT

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் முதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்று, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிறு முதல் புதன்கிழமை (மே 31) வரை 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT