தமிழ்நாடு

வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

29th May 2023 05:59 PM

ADVERTISEMENT

 

அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் வேலூர் மாவட்டத்தில் இன்று 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

இதனால், திங்கள்கிழமை பகலில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். தற்போது கத்தரி வெயில் நிறைவடையும் நிலையில் கூட, வேலூரில் இந்த அளவுக்குக் கடுமையான வெப்பம் பதிவாகியிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு அதாவது மே 15-ஆம் தேதி 108.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் தவறாமல் வேலூர் மாவட்டமும் இடம்பெற்று வந்தது.

ADVERTISEMENT

கோடைக் காலத்தில் வெயில் அதிகளவில் பதிவாகும் மாவட்டமாக வேலூா் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மே மாதத்தில் அதிகபட்சம் 111 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகக்கூடும். அதன்படி, இந்தாண்டு கோடை காரணமாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

குறிப்பாக, வேலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104.5 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. அதேசமயம், மே மாதம் தொடங்கியது முதல் வெயில் அளவு குறைந்து 100 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியிருந்ததுடன், மாவட்டம் முழுவதும் தொடா்ச்சியாக மழையும் பெய்து வந்தது. இந்த கோடை மழையால் வெயிலின் உக்கிரம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலையும் நிலவியது.

இந்நிலையில், மே 13ஆம் தேதியளவில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம், 106.7 டிகிரி என பதிவாகி, கடைசியாக 15ஆம் தேதி வெயில் அளவு மேலும் அதிகரித்து 108.1 டிகிரியாக பதிவாகியிருந்தது. 

கத்திரி நிறைவடையும் இன்றைய நாளிலும் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT