தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை வருவாய் திமுக ஆட்சியில் அதிகரிப்பு: அமைச்சர்

29th May 2023 08:01 PM

ADVERTISEMENT

 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

இதில் பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

கேரளத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பகுதி நேர வேலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது.

இதனால், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்னை குறைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT