தமிழ்நாடு

நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்

29th May 2023 01:44 PM

ADVERTISEMENT

சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். 

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து முதல்வர் அழைப்பு விடுத்து வருகிறார். 

அந்த வகையில் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதல்வர் அழைப்பு விடுத்தார். 

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.  

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT