தமிழ்நாடு

இளையான்குடி அருகே ஆதிருடையவர் அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா

DIN

இளையான்குடி அருகே ஆதிருடையவர் அய்யனார் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி  கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. யாகத்தின் நிறைவாக  பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. 
சிவாச்சாரியார்கள் மக்கள் இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் காலை 9.45 மணிக்கு ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமானோர் குடமுழுக்கை கண்டு தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

குடமுழுக்கின்போது நடைபெற்ற கடம்  புறப்பாடு

அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. குடமுழுக்கு விழாவில் இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்ற உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT