தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

29th May 2023 08:12 PM

ADVERTISEMENT

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை எதிரொலியாக, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம்  மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும் (1666.26 மில்லியன் கனஅடி). 

ADVERTISEMENT

மே 29-ஆம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக அதாவது 1262.11 மில்லியன் கனஅடி உள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 456 கன அடியாக உள்ளது.

தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் அணையில் இருந்து எந்நேரமும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. 

இதையும் படிக்க: போக்குவரத்துத் துறை வருவாய் திமுக ஆட்சியில் அதிகரிப்பு: அமைச்சர்

எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம்  மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT