தமிழ்நாடு

மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி: ஒருவர் கைது

29th May 2023 09:42 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகி உள்ள ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பண்ணவையல் ரோடு பகுதியில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார்கள் சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்தப் பகுதியாக வந்த டாடா டர்போ வாகனத்தை ஆய்வு செய்ய முயன்றபோது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக காவலர்களின் மீது வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்று விட்டனர். 

ADVERTISEMENT

இதில், காவலர்கள் சரவணன், சதீஷ் இருவரும் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வாகனத்தின் உரிமையாளர் ராஜா என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ஓட்டுநர் நிசாந்தை தேடி வருகின்றனர். 

மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT