தமிழ்நாடு

கம்பம் அருகே 4ஆவது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை

29th May 2023 11:42 AM

ADVERTISEMENT

கம்பம் அருகே 4ஆவது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த அரிக்கொம்பன் யானை லோயர்கேம்ப், கம்பம் நடராஜன் மண்டபம், துணை மின்நிலையம் மற்றும் நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றித்திரிந்து பின்னர் துணை மின்நிலையம் வழியாக சனிக்கிழமை இரவு சாமாண்டிபுரம் சென்றது.

அங்கிருந்து சுருளிப்பட்டி ஊராட்சிக்குள் சென்ற யானை கஜம் சாலை வழியாக ஹைவேவிஸ் மலை அடிவாரத்திற்கு சென்றது. அன்று இரவு வனப்பகுதி வழியாக அருகே உள்ள கூத்தனாட்சி மலைப்பகுதியில் நின்றதை திங்கள்கிழமை காலையில் வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து கூத்தனாட்சி மலைப்பகுதிக்கு செல்லும் சாலைகளை யாரும் செல்லாதவாறு காவல்துறையினர் அடைத்துள்ளனர். மருத்துவக்குழுவினர் வனத்துறையினர் அரிக்கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT