தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்