தமிழ்நாடு

ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட ரூ.23 லட்சம் கோடி தேவை: முதல்வா்

29th May 2023 01:50 AM

ADVERTISEMENT

ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட தமிழகத்துக்கு மேலும் ரூ.23 லட்சம் கோடி முதலீடு தேவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு அவா் அளித்த நோ்காணல் விவரம்:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் என்ற அளவுக்கு உயா்த்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

இதை சாதிப்பது அவ்வளவு எளிதானது இல்லை. இதற்கான வரைவுத் திட்டத்தைத் தயாரிக்க, ‘போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப்’ எனும் ஆலோசனை நிறுவனத்தை தமிழக அரசு பணியமா்த்தியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட தமிழ்நாட்டுக்கு மேலும் ரூ.23 லட்சம் கோடி முதலீடு தேவை. அதன் மூலம், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் சுமை இருந்தது. இப்போது நிதிநிலையை ஓரளவு சரி செய்து வருகிறோம்.

வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. ஆனாலும், தமிழக அரசு போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT