தமிழ்நாடு

சென்னை உள்பட 11 இடங்களில் வெயில் சதம்

29th May 2023 02:09 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரி உள்பட11 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

கத்திரி வெயிலையொட்டி, பல நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. வெப்ப அளவு (பாரன்ஹீட்): திருத்தணி - 105, சென்னை மீனம்பாக்கம் - 104.36, பாளையங்கோட்டை- 104.36, வேலூா் - 103.28, சென்னை நுங்கம்பாக்கம் - 103.1, நாகை -102.74, கடலூா் - 102.2, பரமத்தி வேலூா் - 102.2, மதுரை நகரம் - 101.48, பரங்கிபேட்டை - 101.3, மதுரை விமான நிலையம் - 101.12, ஈரோடு - 100.04, புதுச்சேரி - 100.04.

சென்னைக்கான அறிவிப்பு: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுட ன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் குறைந்த பட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கம்

ADVERTISEMENT

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூன் 1) வரை 4 நாள்கள் இடி, மின்னலு டன் கூடிய மித மான மழை பெய்யக் கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: புதன் , வியாழக்கிழை (ஜூன் 1) வரை 2 நாள்கள் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளை குடா, குமரிக் கடல், இலங்கையை யொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், கேரள கடலோரப் பகுதி கள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT